சூரா Al-Maa'un — Almsgiving

சூரா Al-Maa'un (Almsgiving) — 107/114 · 7 வசனங்கள். அரபு மூலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன் படித்து கேளுங்கள்.

أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ

(நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா

Ayah 1

فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ

(ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்

Ayah 2

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ

அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை

Ayah 3

فَوَيۡلࣱ لِّلۡمُصَلِّينَ

(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்

Ayah 4

ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ

அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்

Ayah 5

ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ

(மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்

Ayah 6

وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ

(மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்

Ayah 7